யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 புதிய எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுகளில் 03 தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 09 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், இதுவரை 34 எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழப்பட்டுள்ளன.
அகழ்வுகள் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றையது 24ஆவது நாளாகும்.
இந்த இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வருகின்றது.
இன்றைய அகழ்வில் 3 தொகுதிகள் முழுமையாக அகழப்பட்டதன் மூலம், இதுவரை அகழப்பட்ட எலும்புக்கூட்டு தொகைகளின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமாக இதுவரை 111 எலும்புக்கூட்டு தொகுதிகள் இந்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகழ்வுப் பணிகள் ஒழுங்கு முறையில் 33 நாட்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

