திருகோணமலையில் மொரவெள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டம் பயிடப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா தோட்டம் விசேட அதிரடிப்படையினரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், குறித்த பகுதியில் நுட்பமான முறையில் கஞ்சா பயிரிடப்பட்டு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெற்றுக் கொண்டு நீர் பாய்ச்சுதல் வழியாக கஞ்சா வளர்ப்பு செய்யப்பட்டிருந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.

