யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்று (29-07) செவ்வாய்க்கிழமை மாலை இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, முச்சக்கரவண்டியில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட வன்முறை கும்பல் அவரை வழிமறித்து வாளால் வெட்டிக் காயப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
காயமடைந்த இளைஞர் வீதியில் சென்ற பொதுமக்களால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர

