யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 27 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கண்டரியப்பட்ட நிலைமையின் அடிப்படையில்இ குறித்த இளைஞர் அருகிலுள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பும் வழியில்இ வீட்டின் முன்புறம் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரது உறவினர்கள் உடனடியாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றும்இ அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இறந்தவர் செல்வச்சந்திரன் மிமோஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
அவரது வயது 27 ஆகும். அவரது காலில் பாம்பு கடித்த தடயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

