செம்மணி சிந்துப்பாத்தி ,ந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் இன்று நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளதாவது
இன்றைய தினத்துடன் மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் 25ஆம் நாளாக முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுப் பணிகளின்போது, மூன்று மனித எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன எனவும் சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

