ஆசிரியை திருமதி மலர்விழி செந்தில்வண்ணன், 33 ஆண்டுகால ஆசிரிய சேவையில் பணி புரிந்து ஓய்வு பெறுகிறார்.
தனது ஆசிரியர் வாழ்நாளில், சுமார் 21 ஆண்டுகளுக்கு மேல் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் பணியாற்றிய அவர், அங்கிருந்து தான் 56வது வயதில் ஓய்வு பெற்றார்.
திறமையான ஆரம்பக் கல்வி ஆசிரியையாக, மாணவர்களுக்காக பணியாற்றிய இவர், பல மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வடைய வழிகாட்டியாக இருந்தார்.
கல்வியில் மட்டுமன்றி, ஒவ்வொரு மாணவனும் தனது வாழ்வில் முன்னேற ஏதுவான வழிகளை உருவாக்கியவர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
இன்று (31.07.2025), அவரை கௌரவிக்கும் நிகழ்வு காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து நிகழ்வை சிறப்பித்தனர்.
அவருக்காக ஆசிரியர்களால் வாழ்த்துப்பாவும் பாடப்பட்டது.


