புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போது நிலவுகின்றது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.
வடக்கு பகுதியில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகள் தொங்கவிடுவதற்கே நிதி வழங்கிய புலம்பெயர் தமிழர்கள் மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசாங்கம், நாட்டை பாதுகாக்க போரில் பங்கேற்ற பாதுகாப்புப் படையினரை போர்க்குற்றவாளிகளாக மதிப்பது சோகம் என அவர் தெரிவித்தார்.
முன்னாள் கடற்படைத் தளபதி சிறையில் உள்ள நிலைதான் இதற்குச் சான்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புலிகள் அமைப்பை ஊக்குவித்தவர்கள் இன்று முதலீட்டாளர்களாகக் கொண்டாடப்படுகின்றனர்.
ஆனால், அதே அமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் இன்று நீதிமன்றங்கள், சிறைகள் வழியாக துன்புறுத்தப்படுகின்றனர் என்றார் நாமல்.
மேலும், புலிகள் அமைப்பால் சிதைக்க முடியாமல் போன கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் அழிக்க முயல்கின்றது எனவும், இதன் ஒரு அங்கமாக கல்வி பாடத்திட்டங்களில் இருந்து வரலாற்றுப் பாடத்தை நீக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் நாமல் குற்றம்சாட்டினார்.

