யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அகழ்வாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள்இ பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் முன்னிலையில் நாளை (ஓகஸ்ட் 5) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 வரை காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம்இ ‘பொருட்களை அடையாளம் காண வரக்கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைஇ மருத்துவ சேவைகள்இ உளவள உதவிகள் தேவைப்படலாம்’ எனக் கூறிஇ அதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில்இ குழந்தைகளின் பால் போத்தல்இ பொம்மைகள்இ பாடசாலை பைகள்இ சிறுவர் காலணிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொருட்கள் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவை பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணும் வகையில்இ உரியவிதமான தகவல் பகிர்வு நடைமுறையில் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் பெண் அதிகாரிகள் மற்றும் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இருப்பதின் அவசியம் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
‘வரும் நபர்களுக்கு மொழி மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவு வழங்க இது இன்றியமையாததாகும்’ என சட்டத்தரணி பூரணி வலியுறுத்தினார்.
மேலும்இ அகழ்வாய்வுக்குப் பிறகு மீட்கப்படும் அனைத்து பொருட்களும்இ முறையான தகவல்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நீதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இருப்பினும்இ இந்நிகழ்வில் பங்கேற்கும் பாதிக்கப்பட்டவர்களை ஊடகவியலாளர்கள் படம்பிடிக்க அனுமதி வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

