இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 74 வயதுடைய மாமியாரே கொலை செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தினை தொடர் தகவல்களில்இ இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளில்இ மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கொலை இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபராக இருப்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 29 வயதுடையவர் எனவும்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இரத்தினபுரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

