வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள், கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04-08) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டன.
சுமார் 103 கிலோகிராம் (ஈரமான எடை) கொண்ட இந்த கஞ்சா பொதிகளின் சந்தை பெறுமதி 23 மில்லியன் ரூபாயாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினர் கைப்பற்றிய கஞ்சா பொதிகள், மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

