பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் தொடர்பான பிரேரணை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தாலும், அவற்றுக்கு தீர்வு கிடைப்பதில்லை எனவும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் இவ்விடயங்களைத் தீர்க்கும் முயற்சியை விட, அவற்றை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கம் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அனுபவங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன என்றும் கூறினார்.
ஓட்டமாவடி பிரதேச சபையை தமது கட்சியே வென்றிருந்த போதும், ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்படாமல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து ஆட்சி அமைத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு ஏற்பட்ட புரிந்துணர்வைப் போலவே, காணி பிரச்சினைகள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகளிலும் ஒன்றுபட்டு செயல்பட முடியாதா என்று அவர் கேள்வியெழுப்பினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான அக முரண்பாடுகள் உரையாடலின் மூலம் தீர்க்கப்படலாம் என்றும், கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தையும் தாமதப்படுத்த வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார்.
தனிநாடு மற்றும் சமஷ்டி கோரிக்கைகளுக்காக போராடிய தமிழ் தலைவர்கள், முஸ்லிம் சமூகத்தின் உள்ளக பிரச்சினைகளை பெரிதாக்க தேவையில்லை என்றும், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சிறுபான்மை சமூக பிரச்சினைகள் எந்தக் காலத்திலும் தீர்க்கப்பட்டதில்லை என்றும் வரலாறு சாட்சி என அவர் தெரிவித்தார்.
எனவே, நமது உள்ளக பிரச்சினைகளை நாமே நேரடியாக உரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் சமூகத் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தாலே அனைத்து உள்ளக முரண்பாடுகளுக்கும் முடிவு கிடைக்கும் என அவர் வலியுறுத்தினார்.

