சம்பூர் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பான அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (6) நடைபெற்ற வழக்கு மாநாட்டில்இ மூதூர் நீதவான் தஸ்னீம் பௌஸான்இ கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதியின் ஆலோசனையுடன் இராணுவ பாதுகாப்பு பணியாளர்களின் உதவியுடன் முறையான அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதன் மூலம்இ சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை கண்டறிதல் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பான அடுத்தடுத்த விசாரணைகளை வரும் 26ஆம் திகதி எடுத்துக்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளது.
இதுவரை கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில்இ ஒன்று 25 வயதிற்குக் குறைந்த ஆண் ஒருவருடையதுஇ மற்றொன்று 25 முதல் 40 வயதுக்குட்பட்ட ஒருவருடையதுஇ மேலும் ஒன்று 40 முதல் 60 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரிஇ இத்திடம் மயானம் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும்இ ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மேலும்இ இவர்கள் இயற்கை மரணமா அல்லது குற்றச்செயலால் மரணமடைந்தவர்களா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆய்வுகள் அவசியம் எனவும் கூறினார்.
அத்துடன் காணி அரச காணியாக இருந்தாலும்இ இங்கு மயானம் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என தொல்பொருள் திணைக்களம்இ பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் அறிக்கை வழங்கினர். இவ்வறிக்கைகளை ஆய்வு செய்த பின்னரே அகழ்வுப் பணிகள் தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய வழக்கு மாநாட்டில்இ மாவட்ட சட்ட வைத்திய அதிகாரிஇ தொல்பொருள் திணைக்கள அதிகாரி புவிச்சரிதவியல் துறை அதிகாரி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவு தேசிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் மெக் மிதி வெடி அகற்றும் நிறுவனம்இ பிரதேச செயலாளர்இ பிரதேச சபை செயலாளர்இ காணாமல் ஆக்கப்பட்டோர் தேசிய செயலகத்தின் சட்டத்தரணி பிரதேச காணி உத்தியோகத்தர் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம சேவை அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த ஜூலை 19ஆம் திகதிஇ மிதிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மனித மண்டையோடு மற்றும் கால் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் ஜூலை 23ஆம் திகதி சம்பவ இடத்தை மூதூர் நீதவான் நேரில் பார்வையிட்டார். அதன் பின்இ ஜூலை 30ஆம் திகதி நடைபெற்ற விசாரணையில்இ இன்று (6) நீதிமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஇ இந்த கூட்டத்தின் பின் மனித எச்சங்கள் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

