பொரளை சஹஸ்புராவில் அமைந்துள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நேற்றிரவு (07-08) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த தாக்குதலில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.துள்ளனர்.

