அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் Voice of Future-Sri Lanka அமைப்பினர் மாபெரும் ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்து நடத்தி இருந்தார்கள்.
இந்நிகழ்வானது இன்று புதிய வளத்தா பிட்டி ஸ்ரீ நாவலர் சனசமுகநிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் புதிய வளத்தாபிட்டி, பழைய வளத்தாப்பிட்டி, பழவெளி கிராமம் மற்றும் இஸ்மாயில் புரம் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மக்கள் வந்து தங்களுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற ஆயுர்வேத மருத்துவ முகாமிற்கு அம்பாறையில் அமைந்திருக்கும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத வைத்திய சாலையைச் சேர்ந்த பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள் மருத்துவ சேவை குழாம் கலந்து தங்கள் சேவையினை மிக சிறப்பாக அர்ப்பணிப்புடன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான முழு ஒத்துழைப்பினை புதிய வளத்தாபிட்டி மாற்றத்திற்கான மாணவர்கள் அமைப்பினர் வழங்கிய மையம் சிறப்பம்சமாகும்.
இதன்போது கருத்து வெளியிட்ட உபதவிசாளர் திரு. வினோகாந்த் உண்மையில் இப்படியான மருத்துவ முகாம்களை மருத்துவ மனைகள் அண்மையில் இல்லாத கிராமங்களில் நடத்துவதனால் மக்களுக்கான மருத்துவ சேவைகள் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்க கூடியவாறு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் சம்மாந்துறைக்கு அல்லது அம்பாறைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வசதி வாய்ப்பு உள்ளவர்கள் சென்று தங்களுக்கான மருத்துவ சேவைகளை பெற்ற போதிலும் செல்வதற்கு வசதிகளும் மருத்துவம் சம்பந்தமான அடிப்படை தெளிவூட்டல்களும் இல்லாதவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாக உபதவிசாளர் திரு. வினோகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.








