கனேடியர்கள் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டித்து அமெரிக்கா பயணங்களை குறைத்து, மாற்றாக பிற நாடுகளுக்கான பயணங்களை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனால், கனேடியர்கள் விடுமுறைக்காக அதிகமாக பணம் செலவிடும் சூழல் உருவாகியுள்ளது.
ஆர்ஜென்டினா, ஜப்பான், டென்மார்க், குராசோ போன்ற நாடுகளுக்கு கனேடியர்களின் பயணங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளன.
போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் இதேபோல் உயர்வு காணப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் பொருளாதார சூழல், ட்ரம்பின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவை 51வது மாகாணமாக மாற்றுவது போன்ற அச்சுறுத்தல்கள் கனேடியர்களை கோபப்படுத்தி, அமெரிக்காவுக்கான பயணங்களை 7 சதவீதம் குறைய வைத்துள்ளது.
இதனால் விமான நிறுவனங்கள் அமெரிக்கா-கனடா இடையேயான விமான எண்ணிக்கையை குறைத்து, மெக்சிகன் மற்றும் பிற மாற்று வழிகளுக்கு முன்வருவதற்கு வழிவகுக்கின்றன.

