மன்னாரில் பட்டதாரி இளம் தாயான மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிந்துஜா, மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கின் காரணமாக உயிரிழந்தார் என மருத்துவ பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து, கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர், இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகிய ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது கைது செய்யப்பட்ட மூவரைத் தவிர, மீதமுள்ள வைத்தியர் ஒருவரையும் மற்றொரு தாதிய உத்தியோகத்தரையும் கைது செய்ய வேண்டும் என சிந்துஜா சார்பில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு மீதான மேலதிக விசாரணை மற்றும் விசாரணை நாளாகம் வரும் 12ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

