இலங்கை பெண் ஆதித்யா வெலிவத்த பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2025 “Miss Tourism Universe” போட்டியில்“Queen of the International Tourism” பட்டத்தை வென்று நாடு திரும்பினார்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி மணிலா, பிலிப்பைன்ஸில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் 17 நாடுகளின் 17 அழகிகள் போட்டியிட்டனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஆதித்யா வெலிவத்த, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தாய்லாந்து, பேங்கொக் நகரத்திலிருந்து இன்று (11-08) அதிகாலை 12:20 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கினார்.


