யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவர் மீது பலமுறை கத்திக்குத்து நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாக்குதலாளியை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உட்பட நால்வருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களும் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் மேற்கொண்ட நபர் சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

