மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான விடயங்களைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் நாளை (13-08) நடைபெற உள்ளது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் பகுதியில் இத்திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, ஜனாதிபதியுடன் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரிடமிருந்து முன்வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நாளை ஜனாதிபதி செயலகத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஜெகதீஸ்வரன் கூறின

