மன்னாரில் நடைமுறைக்கு வரும் காற்றாலை மின்திட்டம் பறவைகளுக்கும் இயற்கை சமநிலைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதற்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பறவைகளுக்கு ஆபத்து ஏற்படும் எனப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், தாம் அந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோதும் இதுபோன்ற எந்த சான்றுகளும் காணப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், மன்னார் முதல் பூநகரி வடக்கு வரை, அரசகாணி வரையிலான பகுதி தரிசு நிலமாக உள்ளதுடன், அந்தப் பாதையில் பறவைகள் எதுவும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
சிலர் மன்னாரை ‘சொர்க்கம்’ என அழைத்தும், காற்றாலை விசையாழிகள் அதை அழிக்கும் எனக் கூறியும் வருகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், தன் பார்வையில் அந்த கருத்து தவறானது என்றும், அந்தப் பகுதிகளில் பறவைகளின் இடம்பெயர்ச்சி குறித்த ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
அமைச்சரின் கருத்தை விமர்சித்த சூழல் ஆர்வலர் மெலனி குணதிலக, ‘மழைக்காலத்தில் புவிவெப்பமடைதல் உண்மையா என்று அமைச்சரிடம் கேட்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்.
அதேபோல், ரெகான் ஜயவிக்கிரம, ‘2025 ஆம் ஆண்டின் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான பதில்களில் இதுவே தலைசிறந்தது எனக் கருதலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

