சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில், பெரும் தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில், பெரும் தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி வழிகாட்டலிலும், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகாவின் ஆலோசனையிலும், போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றது.
அறுகுவெளி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவரைச் சோதனையிட்டபோது, அவர்களிடம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 284 கிலோ 415 கிராம் நிறையுடைய, ரூபாய் 7 கோடியுக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவரே யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என்றும், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டில் ஈடுபடுவதாகத் தன்னை போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் முடிந்த பின், சந்தேகநபர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.

