அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் , கல்முனை தொகுயின் தலைவருமாகிய அ.நிதான்சன் அவர்கள் உணர்வு பூர்வமாக அனுஸ்டித்தார்.
இப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று (12) மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.
அம்பாறை மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை நினைவேந்தலானது வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மங்கள விளக்கேற்றல் ஏற்றி வைக்கப்பட்டு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், காரைதீவின் தவிசாளர், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>திருமலையில் தமிழ் முஸ்லீம் மக்களின் 2500 ஏக்கர் காணிகளை அபகரிக்க அரசு திட்டம்




