உள்ளூர்

சட்டவிரோத படுகொலைகள் இலங்கையில் தொடர்கின்றன – மனித உரிமை ஆணைக்குழு கவலை

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவர அறிக்கையில், கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அறிக்கையில், பொலிஸாரின் காவலில் இருந்தபோது பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது பல்வேறு கொலைச்சம்பவங்கள் நடந்ததாகவும், இந்நேரங்களில் சந்தேகநபர்கள் தங்களை தாக்கினர் அல்லது தப்பிக்க முயன்றனர் என்றே பொலிஸார் விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பொலிஸாரின் காவலில் ஏழு பேர் உயிரிழந்ததாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில் 103 இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்ததாகவும், இது 2023 ஆம் ஆண்டின் 120 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க ஒரு சம்பவமாக, மல்வத்துகிரிப்பிட்டிய பகுதியில் பௌத்த மதகுருவை கொலை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் இராணுவ கமாண்டோ கலகர டில்சான் கடந்த மார்ச் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிக்க அவரை பொலிஸார் அழைத்து சென்றபோது, அவர் தனது துப்பாக்கியால் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதற்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த அவர் வத்துபிட்டிவல மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சிவில் சமூகத்தினர், இவ்வாறான மரணங்கள் பொலிஸாரின் சட்டவிரோத படுகொலைகளில் அடங்கும் என வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே, அதிகரித்துவரும் இத்தகைய சம்பவங்களுக்கான தீர்வாக, 2023 டிசம்பரில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்