ஜெர்மனிய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர், ‘சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.
அவர்கள் ஏற்கனவே இறந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தால், உடல்கள் வளைந்து காணப்படாது’ என்று கூறியுள்ளார்.
மேலும், சிலரின் கைகால்கள் வளைந்த நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கங்களை நம்ப முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
‘அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள்.
அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை.
அவர்கள், ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகும் என நினைக்கிறார்கள்.
ஆனால் நாடு கடனில் சிக்கியதற்குக் காரணங்களில் ஒன்று இனப்பிரச்சினை என்பதைக் கூட அவர்கள் உணரவில்லை’ எனவும் நிரஞ்சன் தெரிவித்தார்.
செம்மணிக்கு, குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன், மிகவும் வலிமிகுந்த மற்றும் அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது என யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அடையாளம் ஆய்வு மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுஸானி அழகராஜா கூறினார்.
‘அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள், தந்தையர், சகோதரிகள் காணாமல் போனார்கள்.
இன்று 25 வருடங்கள் ஆகிவிட்டன.
இது பழைய காயங்களை மீண்டும் கிளறுகிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி முழு யாழ்ப்பாண சமூகத்திற்கும் வேதனையை ஏற்படுத்துகிறது’ எனவும் அவர் தெரிவித்தார்.

