திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள், அந்த பகுதிகளில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்றி, அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர்.
விவசாயிகள், ஜனாதிபதி நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடி தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

