வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை இன்று தொடங்கியது.
வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் நடைபெறும் இந்த பாதயாத்திரை ஆலயத்தின் தர்மகர்த்தா சாமி அம்மா தலைமையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இன்று 14ஆம் திகதி ஆரம்பமான பாதயாத்திரை, நல்லூர் கந்தசாமி கோவிலின் தேர் திருவிழா நாளில் நல்லூரை அடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.
காலை கோவிலில் விசேட பூஜைகள் நடைபெற்றதன் பின்னர், பக்தர்கள் வவுனியாவைச் சேர்ந்த பல்வேறு ஆலயங்களை தரிசித்து பாதயாத்திரையை தொடங்கினர்.

