எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ.சு.சசிக்குமார் அவர்களின் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்ததோடு இக் குறித்த ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான ஆதரவினை வழங்கும்படி கோரியுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எமது வடகிழக்கு தமிழர் தாயக பகுதியில் அதீத ராணுவப் பிரசன்னமும் முல்லைத்தீவில் இறந்த இளைஞனுக்கு நீதி வேண்டியும் செம்மணி போன்ற இனப்படுகொலைக்கு நீதியை நிலை நிறுத்தகோரியும் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது கட்சி பேதங்களுக்கு அப்பால் இனத்தின் நன்மை கருதிய ஹர்த்தால் எனவும் ஆகவே அனைவரையும் ஒன்றாக ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம் என திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ.சு.சசிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்>அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் சரியாக பயன்படுத்தவில்லை – ஜனாதிபதி

