பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும், கொழும்பு பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

