அக்கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத்தீவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் மரணத்திற்கு நீதி கோருவதும், இஸ்ரேலிய நபர்களுக்கு விசா விலக்கு வழங்கப்பட்டிருப்பது கவலைக்கிடமானது என்பதையும், அவர்கள் இஸ்ரேலிய படை வீரர்களே என சந்தேகம் எழுப்பப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் தமிழ் அரசுக் கட்சியின் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது நீதி மற்றும் பொறுப்புக் கூறலைக் கோரும் அமைதியான எதிர்ப்பாகும் என்றும், ராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைகளுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பும் நடவடிக்கையாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, நமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் தமது கடைகளை அடைத்து போராட்டத்தில் இணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

