யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியில் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயர் ஒருவர், நகை ஏமாற்றம் காரணமாக உயிர் இழந்தார்.
பெண் ஒருவர் தனது மகனின் திருமண செலவிற்காக 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடமிருந்து வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து பெண்ணை ஏமாற்றி வந்தார்.
நேற்று (16-08) அந்த நகையை கேட்டு பெண் முயற்சித்தபோது, நண்பர் வழங்க மறுத்தார்.
இதனால் மனவிரக்தியில் இன்று அதிகாலை பெண் தூக்கிட்டு உயிர் இழந்துள்ளார்.
சடலம் மீதான திடீர் மரண விசாரணையை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சம்பவத்தில் ஈடுபட்ட சாட்சிகளை இளவாலை போலீசார் நெறிப்படுத்தினர்.

