கல்முனை முத்தமிழ் கலைக்கூடம் நடத்திய இந்நிகழ்ச்சி, காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலைக்கூடத் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார்.
மேலும், கௌரவ அதிதிகளாக நிறுவனத்தின் நடனம் அரங்காற்றுகைத் திணைக்கள சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி, மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியல் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு, ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று, அழைப்பு அதிதிகளாக கல்முனை வலய நடன ஆசிரிய ஆலோசகர் ரிகே. ரீசா பத்திரண மற்றும் திருக்கோவில் ஆசிரிய ஆலோசகர் திருமதி தங்கமாணிக்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நடனத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஐந்து மாணவிகளின் பரதநாட்டிய ஆற்றுகைகள் இந்நிகழ்வின் முக்கிய சிறப்பாக அமைந்தன.


