தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சருடன் நேரடிக் கலந்துரையாடலை கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று சங்கத் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அவர் மறுத்துள்ளார்.
ஆனால், பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா தனது கருத்தில், கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்புக்கான காரணமாகும் என்று குறிப்பிட்டார்.

