முல்லைத்தீவு முத்தையன்கட்டு இளைஞரின் மரண சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்பு மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன்பின், மற்றொரு இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபரும் முன்பு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

