யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது.
ஒப்புக்கொள்ளப்பட்ட ஆஊயு கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையே இவ்வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கமாக அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்தவாறு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் போது ஊழியர்கள் ‘நீக்கப்பட்ட 20மூ ஐ உடனடியாக வழங்குக’, ‘அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்குக’,
‘மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்க்கிறது’,
‘அதிகரிக்கப்பட்ட வரவு செலவு முன்மொழிவுகளுக்கு பல்கலைக்கழகங்கள் தகுதி இல்லையா?’
போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

