இந்தச் சம்பவம் பண்டாரகம துன்போதிய பாலத்திற்கு அருகில் இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் இடம்பெற்றது.
அடையாளம் தெரியாத ஒருவர் காரில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
டி-56 வகை துப்பாக்கி பயன்படுத்தி, குறித்த நபர் மீது 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர

