இன்று (21.08.2025) திருக்கோயில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிக்குமார் தலைமையில், பிரதேச மீனவ சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில், விவசாய சங்கங்கள் முன்வைத்த பிரச்சனைகள் மற்றும் மீனவ சங்கங்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவான விவாதம் இடம்பெற்றது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்காலத்தில் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், பல சங்கங்கள் தங்களது பிரச்சனைகளை நேரடியாக தவிசாளரிடம் முன்வைத்ததையடுத்து, சில விடயங்கள் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிற்கு விரைவான தீர்வுகள் காணப்பட்டன.
அதேவேளை, இன்னும் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு வருங்காலத்தில் தீர்வுகளை வழங்குவதாகவும், மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவதாகவும் தவிசாளர் சசிக்குமார் ஊடகங்களிடம் உறுதியளித்தார்.


