நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மாலை மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர் என எதிர்பார்க்கப்படுவதால்இ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் இத்தகைய பரந்த பரப்பளவிலான மைதானத்தில் மாநாடு நடத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள திடலில்இ 250 ஏக்கர் மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்டுஇ மீதமுள்ள 300 ஏக்கர் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது.
திடலின் பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுஇ உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் போக்கஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டதால்இ மாநாட்டு திடல் ஒளிர்ந்து காட்சியளிக்கிறது.
தொண்டர்கள் அமருவதற்காக பச்சை கம்பளம் விரிக்கப்பட்டுஇ அதில் இரண்டு லட்சம் ஆசனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வி.ஐ.பி.க்களுக்காக சிவப்பு கம்பளத்துடன் 300 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில்இ த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தற்போது மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

