யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், யாழ்ப்பாணத்துக்கென தனிப்பட்ட துறைமுகம் இல்லாததால் மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 165 மில்லியன் ரூபா செலவில் கொழும்புத் துறைமுகத்தையும் நவீனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத நிலையால், வாழைச்சேனை துறைமுகத்தை விரிவுபடுத்த 1,700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலை அடுத்தாண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், யாழ்ப்பாணத்துக்கென தனிப்பட்ட துறைமுகம் இல்லாததால் மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 165 மில்லியன் ரூபா செலவில் கொழும்புத் துறைமுகத்தையும் நவீனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத நிலையால், வாழைச்சேனை துறைமுகத்தை விரிவுபடுத்த 1,700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலை அடுத்தாண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், மன்னார் பேசாலையில் இறங்குத்துறை அமைக்கவும், பேசாலை மக்களுடன் கலந்துரையாடி துறைமுகம் கட்டும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், யாழ்ப்பாண குருநகர் பகுதியில் இறங்குத்துறை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்