யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அந்த காணியில் வெடிபொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் இன்று (22) நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களும் ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மீட்புப் பணிகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றன. இதில் யாழ்ப்பாணம் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து செயற்படுகின்றனர்.

