கட்டுரை முக்கிய செய்திகள்

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமை பறிப்பு

1977-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த யூ.என்.பி அரசு, விசேஷத் தலைவர் ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோவின் அரசியல் மற்றும் பொது உரிமைகளை ஏழு ஆண்டுகளுக்கு நிறுத்தியது.
நீதியின் பெயரில் அரசியல் தண்டனைதானா? இல்லையா அதிகார துஷ்பிரயோகமா என்ற விவாதம் இன்றும் தொடர்கின்றது

1980 அக்டோபர் 16 அன்றைய நாள் இலங்கை அரசியல் வரலாற்றில் விவாதம் குன்றாத நாளாகவே நினைவுகூரப்படுகின்றது.

அந்த நாள்தான், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு ‘உiஎiஉ னளையடிடைவைல’—அதாவது பிரஜாஃஅரசியல் உரிமை பறிப்பு—என்ற தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்டது.

அதன் விளைவாக அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இழந்தார்; வாக்களிக்கும் உரிமையும், பொதுப் பதவிகளுக்குப் போட்டியிடும் வாய்ப்பும் பறிக்கப்பட்டது.

1970–77 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த எஸ்.எல்.எஃப்.பி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக, 1977-ல் அதிகாரத்தில் அமர்ந்த ஜே.ஆர். ஜெயவர்தனே தலைமையிலான அரசாங்கம் விசேஷத் ஆணைக்குழுவை நியமித்தது.

அந்த ஆணைக்குழு ‘அதிகார துஷ்பிரயோகம்’ நடைபெற்றதாகக் கண்டறிந்த சில விவகாரங்களைத் தாங்கி அறிக்கையிட்டது.

அதைத் தொடர்ந்து, 1980 அக்டோபர் 16 அன்று பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, சிறிமாவோவுக்கு ஏழு ஆண்டுகள் பிரஜா உரிமை பறிப்பை அமுல்படுத்தியது.

அதே நடவடிக்கையின் கீழ், முன்னாள் சக்திவாய்ந்த அமைச்சர் ஃபெலிக்ஸ் டயாஸ் பண்டாரநாயக்கவுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம், பதவி இழப்பு, தேர்தல் போட்டியிலிருந்து விலக்கல் —இந்த மூன்றும் சேர்த்து வந்த அரசியல் புறக்கணிப்பு, நடைமுறையில் நாடு வெளியே தள்ளப்பட்டதற்குச் சமமான தாக்கத்தைச் செய்தது.

தேசிய அரசியலின் மையப் பரப்பிலிருந்து சிறிமாவோவை நீக்கிய அந்த முடிவு, எதிர்க்கட்சி அமைப்பையும் பெண் முன்னேற்ற அரசியல் சின்னத்தையும் ஒரே நேரத்தில் பலவீனப்படுத்தியதாகவும் பார்க்க முடியும்.

‘விசேஷ ஆணைக்குழு—நீதிமன்றம் அல்ல. அதற்குப் பின்னால் நிற்கும் பாராளுமன்றத் தீர்மானம்—அரசியல் பெரும்பான்மையின் சக்தி. இதனால் சட்டத்தின் பெயரில் அரசியல் தண்டனை நிகழ்ந்தது.’

சில மதத் தலைவர்களும் குடிமக்கள் அமைப்புகளும் அந்நாளில் இதனை ‘னசயஉழnயைn’—அதிகக் கடுமையான சட்டகருவி—என்று விமர்சித்துள்ளனர்.

அந்தத் தண்டனை, இரண்டு ஆண்டுகளில் வரவிருந்த 1982 ஜனாதிபதி தேர்தலை நேரடியாகப் பாதித்ததா? என ஆராய்ந்தால் அரசியல் ஆய்வாளர்கள் பலர் ‘ஆம்’ என்றே கூறினர்

முக்கிய எதிர்ப்பார்ப்பாளராக இருந்த சிறிமாவோவின் போட்டி வாய்ப்பு அடைக்கப்பட்டதால், ஆளும் தரப்புக்கான பாதை சுலபமானது என்ற விமர்சனம் அதிகரித்தது.

இவ்வாறு, சட்டத் தீர்மானமும் தேர்தல் அரசியலுமிடையே உள்ள ‘சந்திப்புப் புள்ளி’ 1980 சம்பவத்தை இன்னும் அரசியல் ஆய்வின் மையமாக வைத்திருக்கிறது.

ஆறு ஆண்டுகள் கடந்தபின், 1986 ஜனவரி 1 அன்று ஜனாதிபதி உத்தரவொன்றின் மூலம் சிறிமாவோவின் பிரஜா உரிமைகள் மீட்கப்பட்டன.

அதன் பின்னர் அவர் மீண்டும் அரசியலுக்கு திரும்பினார்—1988 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நின்றார்;.
1989-ல் நாடாளுமன்றத்திற்குத் திரும்பி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

1980-ன் அந்த நாள் இன்று வரையிலும் இலங்கை ஜனநாயகத்தைப் பற்றிய ஒரு பெரும் கேள்வியை விட்டுச் செல்கிறது:

‘சட்டத்தின் கருவி யாரின் கையில் இருக்கிறது?

அரசியல் போட்டியாளரை நீக்குவதற்கான ஆயுதமா அது, அல்லது அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான சமூகக் கணக்கெடுப்பா?

சிறிமாவோவின் உரிமை பறிப்பு மற்றும் பின்னர் நிகழ்ந்த மீட்பு இரண்டும் சேர்த்து, சுதந்திரத் தீவின் அதிகாரம் நீதிஅரசியல் மூவலயத் தகராறை தெளிவாக வரைவதற்கான வரைபடமே ஆகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கட்டுரை

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில் முனைப்பாக வெளிக்காட்ட முடியும் – கலாநிதி ஜெகான் பெரேரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம்
கட்டுரை

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்…!

  தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்…! தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது