பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் அல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்த பின்பு, அவருக்கு பிணை வழங்குவதை எதிர்த்தது முறையான ஆலோசனை அற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதிலேயே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்ட கருத்துகளை தெரிவித்துள்ளார்.

