தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று நிறைவுக்கு வந்தது.
அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டின்பேரில் பணிப்புறக்கணிப்பு உடனடியாக முடிவுக்கு வந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.
கடந்த 17ஆம் திகதி முதல் 19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

