இலங்கை மற்றும் இந்தியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (ஆழரு) பொதுமக்கள் முன் வெளியிட வேண்டும் என இலங்கை பல்கலைக்கழக பிக்கு பேரவை (IUBF) ஜனாதிபதி செயல்மரப்பிற்கு கடிதம் ஒன்றை நேற்று (25-08) கையளித்துள்ளது.
IUBFஒருங்கிணைப்பாளர் மதிரிகிரியே இச்ஸரதம்ம தேரர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:
‘இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வருகை தந்தபோது, இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சில ஊடகங்கள் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும், சிலர் பத்து எனவும் தெரிவித்தனர்.
ஆனால் இவை தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தாலும், அவற்றை அரசு பொதுமக்களுக்கு வெளியிடவில்லை.
உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த சில அறிக்கைகள், பாதுகாப்பு மற்றும் ஆற்றல் தொடர்பான ஒப்பந்தங்களின் நகல்களை வெளியிட்டன.
அவற்றில் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் விதமான பிரிவுகள் உள்ளதாகவும், இலங்கை குடிமக்களின் தகவல் (biometric) தரவுகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் திட்டங்கள் மற்றும் மன்னார், திருகோணமலை பகுதிகளில் குடியிருப்போரைக் குடியகற்றிச் சிறு நிலப்பகுதிகளை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.’
‘இத்தகைய விடயங்களை எதிர்த்து விமர்சன நிலைப்பாட்டில் இருந்த தற்போதைய ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த பின் வெளிப்படைத்தன்மையில்லாமல் இரகசியமாக இவ்வப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.
இவை நாட்டின் நலனுக்கு எதிரானதாக இல்லையெனில், அரசு எளிதாகவே அவற்றை பொதுமக்களிடம் வெளியிடலாம்’ என தேரர் சுட்டிக்காட்டினார்.
இதே தொடர்பில், ஜனாதிபதி சட்ட இயக்குநர் வழக்கறிஞர் ஜே.எம். விஜேபந்தார, இது குறித்து விசாரிப்பதற்கு வெளிநாட்டு விவகார அமைச்சை அணுக வேண்டும் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

