மட்டக்களப்பில் களுவங்கேணியைச் சேர்ந்த இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் என்பவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
கொழும்பில் இருந்து வந்த சிஐடி குழுவினர், கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பகல், அவருடைய வீட்டிலேயே கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட பாலசுந்தரம் மீது சுமார் ஏழு மணித்தியாலங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அதே நாளில் இரவு 9.00 மணியளவில் அவரை விடுவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

