கொழும்பு கோட்டை நீதவான்; நீதிமன்ற நீதிபதி நிலுபுலி லங்கபுரா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை அதாவது இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
இன்று (26) நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாவது அவசியம் என தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அவரது உடல்நிலை காரணமாக சிறைச்சாலையினர் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐஊரு) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர், அவர் முதலில் சிறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உடனடியாக ஐஊரு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

