முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்ட விவகாரத்தில் நாட்டின் கவனம் ஈர்க்கப்பட்டிருந்த போதும், இலங்கையின் திருத்தகாலச் சிறைச்சாலைகள் தற்போது மோசமான நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
பொதுவாக தப்பிச் செல்வது, காவல் நிலைய மரணம், குற்றசாட்டப்பட்ட கும்பல் தலைவர்கள் அல்லது அரசியல்வாதிகள் சிறையில் வைக்கப்படுவது போன்ற சமயங்களில் மட்டுமே வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படும் சிறைச்சாலை அமைப்பு, தற்பொழுது அதிகமான கைதிகளைத் தாங்க முடியாமல் திணறுகிறது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2020ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் உணவு, சுகாதாரம், பாதுகாப்பு குறைவாக உள்ளதோடு, இடம் பற்றாக்குறை காரணமாக கைதிகள் மாறி மாறி தூங்க வேண்டிய நிலை அல்லது கழிப்பறைகளில்கூட உறங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
12,000 கைதிகளை மட்டுமே தாங்கும் திறனுடைய இலங்கையின் 36 சிறைச்சாலைகளில் தற்போது 31,150 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இது மொத்த கொள்ளளவின் 260மூ ஆகும். இந்நிலை கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளைக் குறைக்கும் மட்டுமல்லாமல், அவர்களைச் சீர்திருத்துவதற்கான முயற்சிகளையும் பாதிக்கிறது.
ஜூன் மாத நிலவரப்படி சிறைச்சாலைகளில் 29,820 ஆண்கள் மற்றும் 1,330 பெண்கள் உள்ளனர். இவர்களில் 21,996 பேர் (20,868 ஆண்கள், 1,128 பெண்கள்) குற்றவாளிகள் அல்லாமல், வழக்கு விசாரணைக்காக காத்திருக்கும் விளக்கமறியல் கைதிகளாக உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகள் 9,154 பேர் (8,952 ஆண்கள், 202 பெண்கள்) மட்டுமே.
ஒரு மூத்த சிறைச்சாலை அதிகாரி, ‘31,000 கைதிகளில் சுமார் 9,000 பேரே தண்டிக்கப்பட்டவர்கள்; மீதியவர்கள் வழக்குக்காக காத்திருப்பவர்கள். இது நீதித்துறையில் மிகப்பெரிய தடையாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.
2021-2023 காலப்பகுதியில், சிறை நெரிசலைக் குறைப்பதற்காக வீட்டு சிறைவாசம் முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது.
ஆனால் 2024 இறுதி வரை அதற்கான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கும் பணி ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.
ஆரம்பத்தில், இது சிவில் குற்றச்சாட்டுகளுக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் திட்டமிடப்பட்டது.
மேலும், போதைப்பொருள் பழக்கமுடையவர்களை விளக்கமறியலில் வைக்காமல், தனிப்பட்ட சீர்திருத்த மையங்களில் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிறைச்சாலைகளைப் போலவே சீர்திருத்த மையங்களும் பழமையானவையும் ஏற்கனவே கொள்ளளவை மீறியவைகளுமாக உள்ளன.
மற்றொரு மாற்று வாய்ப்பு, சந்தேகநபர்களை குறிப்பிட்ட இடத்துக்குள் மட்டுமே வைக்க மின்னணு கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்துவதாகும்.
இதற்கு பொதுவாக நடநஉவசழniஉ அழnவைழசiபெ (நுஆ) என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் சந்தேகநபரின் கால் அல்லது கையில் கருவி பொருத்தப்பட்டு, அவர் குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியேறினால் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் செல்லும். இதை பநழ-கநnஉiபெ முறையின் கீழ் டிஜிட்டல் எல்லையாக அமைக்க முடியும்.
தற்போதைய நெரிசலைக் கருத்தில் கொண்டால், இம்முறையால் அரச செலவுகள் குறைக்கப்படுவதோடு, போதைப்பொருள் பழக்கமுடையவர்களை மீளச் சமூகத்தில் இணைக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும்.
அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இம்முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. விரைவில் தென்கிழக்காசியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகள் நீண்டகாலம் தொடரும் சூழ்நிலையில், ஆராய்ந்து, உரிய வளங்களுடன் செயல்படுத்தப்படும் இப்படியான மாற்று வழிகள் சிறைச்சாலைகளின் மனிதாபிமானமற்ற நெரிசலைக் குறைக்கும் ஒரு தீர்வாக இருக்கக்கூடும்.
