கிளிநொச்சி ஏ9 வீதியில், கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பயங்கரமான விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேரூந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த ரிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதே நேரத்தில், ரிப்பருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து ரிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
போலீசார் தெரிவித்ததாவது, சம்பவ இடத்தில் இருந்த மக்கள் அவசர நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து புகைப்படம் எடுத்ததாக கவலை வெளியிட்டுள்ளனர்
பொலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று படுகாயமடைந்தவரை நோயாளர் காவு வண்டியால் வைத்தியசாலைக்கு அனுப்பி, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


