வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை பரிசோதித்தபோது, வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு உடல்நிலை பிரச்சினை எதுவும் இல்லை எனவும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்பில், தனது கைது தொடர்பான பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் முன்னர் நிராகரித்திருந்தது.
இதனையடுத்து அவர் கொழும்பு மேல்நீதிமன்றில் ஆஜரான பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டார். அதுவரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர், நேற்று (29-08) அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது