சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு மற்றும் கிழக்கை தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து பங்கேற்றனர்.
தங்கள் அன்புக்குரியவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதற்கான நீதியை கோரியும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் வலியுறுத்தினர்.
அதன் மூலம், பல ஆண்டுகளாக நீதி தேடி வரும் குடும்பங்கள் தமது குரலை மீண்டும் உலக சமுதாயத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.


