ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

சுயமாக ஏற்படுத்திக் கொள்ளும் நிதி இரத்தக்கசிவு

இலங்கையின் அரசு துறை மற்றும் தொழிற்சங்கங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இடதுசாரி அரசியலின் அங்கமாகவும் பின்னர் மையவலதுசாரி அரசியலிலும் அவை தவிர்க்க முடியாத பகுதியாகவும் இருந்து வருகின்றன.

நாட்டின் தொழிலாளர் இயக்கங்களும் அவர்கள் கடினமாகப் பெற்ற தொழிலாளர் உரிமைகளும் பிராந்திய நாடுகளுக்கு பொறாமை தரக்கூடியதாகவே இருந்து வந்தன.
ஆனால் பலமுறை தொழிற்சங்கங்களும் அதனுடன் இணைந்த அரசியலும் நாட்டை முடக்கி வைத்ததோடு அரசுக்கு பெரும் நிதிசுமையையும் ஏற்படுத்தியுள்ளன.

தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நிலையில், மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் அரசு சேவைகளின் பொருளாதாரத் தாங்கும் திறனும் செயல்திறனும் பாதுகாக்கப்படுதல் அவசியம்.
ஆனால் இந்த அம்சம் உரிமை ஆர்வலர்களாலும் கண்காணிப்பாளர்களாலும் பெரிதாக எடுத்துரைக்கப்படுவதில்லை.

இன்று இலங்கை மிகுந்த சிக்கனக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் மூலம் எட்டியுள்ள சார்ந்த நிலைத்தன்மையை காக்க போராடி வருகிறது.

வரலாற்றில் மிகக் கடுமையான காலத்தை கடந்து வந்துள்ள நிலையில், இப்போதைய கட்டத்தில் அரசு சேவைகளையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் குழப்பங்களுக்கு நாடு இடமளிக்க முடியாது.

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் பொதுவாக படிப்படியாக ஆரம்பிக்கப்படுவதில்லை.
பெரும்பாலும் முழுமையான வேலைநிறுத்தங்களாகவும் திடீர் இடையூறுகளாகவும் வெளிப்படுகின்றன.
இந்நிலையில் இழக்கப்படும் வருவாய், சிதைந்த நம்பிக்கை, உற்பத்தி மந்தம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கை குறைதல் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்துக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்துகின்றன.

சமீபகாலமாக தபால் மற்றும் ரயில்வே துறைகளில் நடந்த வேலைநிறுத்தங்கள், தொழிலாளர்களின் ஆழ்ந்த குறைகளை வெளிப்படுத்தியதோடு மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாரிய இழப்புகளையும் வெளிப்படுத்தின.

கடந்த மாதம் தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்.
அதனைப் பற்றி தபால் திணைக்களப் பொது மேலாளர் ருவான் சத்குமாரா எச்சரிக்கை விடுத்து, ‘உடனடி நிதி இழப்பு ஒரு பக்கம்; அதைவிட ஆபத்தானது வாடிக்கையாளர்கள் எங்களை விட்டு விலகிச் செல்வதுதான்.
மக்கள் தனியார் கூரியர் சேவைகளுக்கோ அல்லது டிஜிட்டல் மாற்றுகளுக்கோ மாறிவிட்டால், அவர்களை மீண்டும் திருப்பிக் கொண்டு வருவது கடினமாகிவிடும்.
அந்த நீண்டகால இழப்பு வேலைநிறுத்தத்தை விடப் பெரிய செலவாக அமையும்,’ என தெரிவித்தார்.

கணக்குகள் படி, தபால் திணைக்களம் ஒரு முழுமையான வேலைநிறுத்த நாளுக்கு ரூ. 25 முதல் 30 மில்லியன் வரை இழக்கக்கூடும்.
ஆனால் பொது மேலாளர் வலியுறுத்தியது, பண நஷ்டத்தை விட பெரும் ஆபத்து, மதிப்பிழப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாக தனியார் சேவைகளுக்குத் திசைதிருப்பப்படுவதே எனும் கருத்தாகும்.
நாட்டின் சுமார் 600 தபால் நிலையங்களில் 160க்கும் குறைவானவை மட்டுமே வேலைநிறுத்தத்தின் போது திறந்திருந்தன் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டன.
தொழிலாளர்கள் தங்கள் குறைகளை முன்வைத்தாலும், அவசியமான சீர்திருத்தங்களைப் பல தசாப்தங்களாக மறுத்து வருகின்றனர்.

இதேபோல் ரயில்வே துறையும் இவ்வாண்டு பல வேலைநிறுத்தங்களை மேற்கொண்டது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்தும் தொழிற்துறையின் இயக்கமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிர்வாக அறிக்கையின்படி, பயணச்சீட்டு விற்பனையிலிருந்து ரூ. 13.2 பில்லியனுக்கும் அதிக வருவாய் கிடைத்துள்ளது.
இது 2022 ஐ விட 56மூ அதிகம். இதனால் தினசரி சராசரி வருவாய் ரூ. 36 மில்லியன் என்பதை காட்டுகிறது.

எனவே ஒரே ஒரு வேலைநிறுத்த நாளால் கூட நாட்டிற்கு ஏற்படும் நஷ்டம் கணிசமானது.

தனியார் துறையில் வேலைநிறுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அத்துறை பாதிக்கப்படும்.
ஆனால் அரசுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கும் இடமுண்டு.
ஆனால் இன்றைய இலங்கையின் அரசு துறை அமைப்பில், அரசுக்கு அரசு நிறுவனங்களில் (ளுழுநுள) நடைபெறும் வேலைநிறுத்தங்களை கையாள வழிகள் குறைவு.
பல துறைகள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தங்களை மேற்கொண்டால் அரசே அழுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் அதிகம்.

இந்நிலையில் அரசுக்கு ஏற்படும் செலவும், மக்கள் நம்பிக்கையில் உண்டாகும் குறைப்பும் நாட்டை மிகக் கடுமையாக பாதிக்கும்.
ஆகையால் இலங்கையின் அரசு துறையும் அரசு நிறுவனங்களும் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மாறிவரும் உலகச் சூழலில் மீண்டும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றால், இத்தகைய பலவீனங்களை இனி சுமந்துசெல்ல முடியாது. நாடு இழப்புகளைச் சகிக்க முடியாத சூழலில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசிரியர் கருத்துக்கள்

வீடு கட்டிக் கொடுத்தால் வேட்பாளராகலாம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீடு மாவிட்டபுரத்தில் உள்ளது. மாவையின் பூர்வீக வீடு யுத்தத்தில் முற்றாக சிதைந்தது. யுத்தம் முடிந்த பின்னர் அந்த
கட்டுரை

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில் முனைப்பாக வெளிக்காட்ட முடியும் – கலாநிதி ஜெகான் பெரேரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம்